தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் ஆரம்பமானது.
குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பாக அதன் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டதோடு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
இரண்டாவது கூட்டத்தில் கடந்த கலந்துகொண்டிராத நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தார்.
அத்தோடு ஸ்ரீகாந்தா மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையிலான கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
மேலும் சுகயீனம் காரணமாக தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்குபற்றாத நிலையில் அதற்கு பதிலாக அவரது பிரதிநிதி கலந்துகொண்டதாக ஆதவன் செய்தி வேவைக்கு செல்வம் அடைக்கலநாதன் உறுதிப்படுத்தினார்.
இதேநேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கட்சி சார்பாக அமீர் அலியும் கலந்துகொண்டிருந்தார்.
இந்தக் கட்சிக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட கூட்டறிக்கை இன்று பிற்பகல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.