ரஷ்யா வழங்கும் எஸ்-400 ஏவுகணை தடுப்பு இயந்திரத்தை பஞ்சாப் எல்லையில் நிறுவ இராணுவ அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு ஐந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதன்படி முதல் இயந்திரத்திற்கான பாகங்கள் ரஷ்யாவில் இருந்து வரத் ஆரம்பித்துள்ளது. குறித்த பாகங்கள் அனைத்தும் இந்த மாத்தின் இறுதிக்குள் வந்தடையவுள்ளன.
முதல் ஏவுகணை பஞ்சாப் எல்லையில் நிறுவப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வான்வழி தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் இந்த ஏவுகணையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.