அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிப்பகிஷ்கரிக்கு இன்று(புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர், வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தினார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டாலும், அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளின் செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.