ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
குறித்த கடித்தில் ஒமைக்ரன் வைரஸ் டெல்டா வகையை விட மூன்று மடங்கு வேகமாக பரவும் தன்மைக் கொண்டது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய அளவில் கூடும் கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட அளவில் கொரோனா தொற்று பரவல் மற்றும் ஒமைக்ரோன் பாதிப்பு பற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.