ஒமிக்ரோன் திரிபு தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் சேர்வதற்கான தேவை குறைவாக இருப்பதாக பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு முகமையின் ஆரம்ப கட்ட கண்டுபிடிப்பு கூறுகிறது.
முந்தைய திரிபுகளை ஒப்பிடும்போது மருத்துவமனையில் சேர்வதற்கான தேவை 50 முதல் 70 சதவீதம் குறைவாகவே ஏற்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றது.
ஆனால், எண்ணிக்கையில், இந்த ஒமிக்ரோன் திரிபு அதிக அளவிலான மக்கள் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலையை ஏற்படுத்தும் என இந்த ஆய்வு கூறுகின்றது.
அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கு சிறிது காலம் பிடிக்கும் என பிரித்தானிய சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போட்ட பிறகு 10 வாரம் கழித்து ஒமிக்ரோன் தொற்றினை தடுக்கும் ஆற்றல் குறைந்துவருகிறது என்பதையும் அந்த ஆய்வு எடுத்துரைக்கிறது.
ஆனால், தீவிர நோய் ஏற்படுவதற்கு எதிராக இது பாதுகாப்பை வழங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.