அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினரால் இன்றும் (வெள்ளிக்கிழமை) நாட்டின் சில பிரதான நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் உரப் பிரச்சினை என்பனவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, இன்றைய தினம் பாணந்துறை, காலி, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், சிலாபம், ரிக்கிலகஸ்கட, பூண்டுலோயா, கதுருஓயா மற்றும் திருகோணமலை முதலான பகுதிகளில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தம் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இந்தப் போராட்டங்களில் இணைந்துகொள்ளள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு, விலைவாசி அதிகரிப்பினால் அல்லலுறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினால் நாட்டின் சில பகுதிகளில் நேற்றைய தினமும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.