ஜிஎஸ்டி வரிவிதிப்பில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணமாக புத்தாண்டு முதல் பல்வேறு பொருட்களின் விலை உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் போர்வைகள் போன்ற ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தியுள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஜனவரி மாதம் முதல் பொருட்களின் விலையும் உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட விலை உள்ள பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவீத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஓலா ஊபர் போன்ற எஃப்கள் மூலமாக ஆட்டோ புக்கிங் செய்தால் 5 சதவீத வரி வசூலிக்கவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த புதிய வரிவிதிப்பு புத்தாண்டு முதல் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.