சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளாந்தம் 6,500 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கின்றது.
டொலர் நெருக்கடி காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய முடியாமல் கடந்த நவம்பர் 15ஆம் திகதி மூடப்பட்டு 22 நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 7ஆம் திகதி திறக்கப்பட்டது.
இன்று மூடப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாத இறுதிக்குள் மீண்டும் திறக்கப்பட முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதேவேளை, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஏற்றிச் செல்லும் இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளது.
அதன் எரிபொருளை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.