• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மட்டக்களப்பில் தொடர்ந்து அடைமழை 120மி.மீ மழை வீழ்ச்சி பதிவு!

1.048 Views
3 years ago
73 0
0
Share
Facebook Twitter WhatsApp
    shagan shagan
    0 Subscriber

    மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையால் தாழ் நிலப்பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பபுதியிலுள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் பட்டாபுரம் கிராமத்தில் அதிளவு வெள்ள நீர் தேங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பெரியபோரதீவு மட்பாண்ட வீதியில் அமைதுள்ள வீட்டிலிருந்து தென்னை மரம் ஒன்றும் காற்றினால் சரிந்து அயல் வீட்டின் மீது வீழ்ந்துள்ளது.

    இதுஇவ்வாறு இருக்க மட்டக்களப்பில் 120.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கிரானில் 58.8 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உன்னிச்சையில் 49.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், உறுகாமத்தில் 51.4மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், வாகனேரியில் 158.7மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கட்டுமுறிவில் 49.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், நவகிரியில் 56.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணியில் 64.5மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளியில் 103.4மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பாசிக்குடாவில் 89.0மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், கல்முனையில் 24.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், (செவ்வாய்கிழமை) காலை 8.30மணிவரையில் கடந்த 24 மணித்தியாலத்தில் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

    இது இவ்வாறு இருக்க செவ்வாய்கிழமை காலை 6 மணிவரையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 29அடி 4அங்குலம், உறுகாமம் உளத்தின் நீர்மட்டம் 15அடி 4அங்குலம், வாகனேரி 18அடி 0அங்குலமும்,  கட்டுமுறிவுக்குளம் 12அடி 6அங்குலம், கித்துள்வெவகுளம் 7அடி 5அங்குலம், வெலிக்காக்கண்டியகுளம் 15அடி 3அங்குலம், வடமுனைக்களம் 12அடி 8அங்குலம், நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 29அடியாகவும், தும்பற்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 15அடி 8அங்குலமாகவும், உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அடைமழை பெய்து வருவதனால் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் காக்காச்சுவட்டை – சின்னவத்தை வீதி, வெல்லாவெளி – மண்டூர் வீதி, மாலையர்கட்டு – றாணமடு வீதி, ஆகியவற்றை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் கிரான் வீதியை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால்  அவ்வீதிப் போக்குவரத்திற்கு இயந்திரப்படகு பயன்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

    Related

    Category: இலங்கை
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!
    இலங்கை

    தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணை டி.ஐ.டி.யிடம்!

    2025-05-23
    வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!
    இலங்கை

    வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!

    2025-05-23
    இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
    ஆசிரியர் தெரிவு

    இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

    2025-05-23
    இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
    இலங்கை

    இலங்கை வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

    2025-05-22
    நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
    இலங்கை

    உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்!

    2025-05-22
    அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!
    இலங்கை

    மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று வைப்பு!

    2025-05-22
    Next Post
    ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம்- சட்டத்துறை அமைச்சர்

    ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுப்போம்- சட்டத்துறை அமைச்சர்

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.