ஊழல் இல்லாத நாட்டை கட்டியெழுப்ப பொது நிலைப்பாடு ஒன்று அவசியம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
1994 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் மக்கள் பொருளாதார அடிப்படையிலோ பொருளாதார பிரச்சினைக்காகவோ அரசாங்கத்தை தெரிவு செய்யவில்லை என சுட்டிக்காட்டினார்.
ஆனால் தற்போது பொருளாதாரம் சீர்குலைந்துள்ளமையினாலேயே மக்கள் அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என கோருகின்றனர் என அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
ஆகவே நாட்டை கட்டியெழுப்ப ஊழல் இல்லாத ஆட்சி அவசியம் என அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.