பிரான்ஸில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் இம்மானுவேல் மேக்ரான் பேசிய வார்த்தைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்த சொல்லி ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்களை வலியுறுத்தி வருகிறது.
தடுப்பூசி செலுத்தாதவர்களை நான் சிறைக்கோ கட்டாயப்படுத்தவோ போவதில்லை என தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, மக்களை எரிச்சலூட்ட போவதாக தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் உணவகம் செல்ல முடியாது, தேநீர் குடிக்க முடியாது. படம் பார்க்க முடியாது என கூறப்போவதாக தெரிவித்துள்ளார்.