தீவக பகுதியில் வேலைவாய்ப்பு இன்றி காணப்படும் இளைஞர் யுவதிகளுக்களின் தொழில்முயற்சிக்கான வாழ்வாதாரத்தின் பெற்றுக்கொடுக்க எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரிக்கபட்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ் தீவக வேலணை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மண்கும்பான் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலாத்தளத்தின் கடற்பரப்பிலான சுற்றுலாபடகுகள் சேவையினை ஆரம்பிக்கும் கட்டிட நிர்மாணப்பகுதியினை திறந்துவைக்கும் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ்தேவானந்தா கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், ”கடற்பரப்பிலான துரித அபிவிருத்தி சேவையிலான பங்களிப்பினை வழங்க தனியார் முதலீட்டாளர்கள் முன்வந்த நிலையில் இதற்கான நடவடிக்கை அரசாங்கத்தினால் முன்னேடுக்கப்பட்டுள்ளது.அதற்காக மிகுந்த நன்றியினை தெரிவித்துகொள்ளுகின்றேன்.” என தெரிவித்தார்.
இதற்காக 26 மில்லியன் ரூபா செலவில் முதற்கட்டமான அபிவிருத்திவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வில் இலங்கை கப்பற்துறை கூட்டுத்தாபனத்தின் தலைவர் வீரமன்னன் ராஜவே,வடபிராந்திய கடற்றொழில் கட்டளைத்தளபதி அட்மிரல் பிரியந்த பெரேரா,யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவிப் திணைக்களப்பணிப்பாளர் ஜெ.சுதாகர்,
யாழ் இந்திய உதவித்துணைத்தூதரகத்தின் பதவிநிலை அதிகாரி டீ.கேசர்,உள்ளிட்ட அதிகாரிகள் சுற்றுலாத்துறை அதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள்,பலரும் கலந்துகொண்டனர்.