எதிர்வரும் 18ஆம் இலங்கை செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியதன் பின்னர், அந்நிய செலாவணி மேலும் குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் காலநிதி நிஷாந்த டி மெல் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இலங்கை தரப்படுத்தலில் மேலும் வீழ்ச்சியடையும் நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்துவதனால் மட்டும் இப்பிரச்சினை தீர்ந்துவிடாது எனவும் கடனை செலுத்தும் அளவுக்கு அந்நிய செலாவணி குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.