நாட்டில் பகலில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருள் இருப்புக்களை வழங்க இணங்கியுள்ளதால் இம்மாதம் மின்வெட்டை அமுல்படுத்தவேண்டிய தேவையில்லை என அந்த மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 05 நாட்களுக்கு போதுமான எரிபொருள் தற்போது கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் 300 மெகாவோட் மின்சார இழப்பு காரணமாக, நாட்டில் மின்சார விநியோகம் தற்போது எரிபொருளில் தங்கியுள்ளது.
இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும் நாளாந்தம் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின் வெட்டினை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.