நான்கு முக்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் இம்மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் பீட்டர் சிஜார்டோ (Péter Szijjártó), துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு (Mevlut Cavusoglu), இங்கிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (எஃப்சிடிஓ) இராஜாங்க அமைச்சர் லார்ட் (தாரிக்) அஹ்மத் மற்றும் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங் (Park Byeong-seug) ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
ஹங்கேரியின் வெளிவிவகார அமைச்சர் பீட்டர் சிஜார்டோ நாளை இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை லார்ட் (தாரிக்) அஹ்மட் ஜனவரி 18 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கொரிய தேசிய சபையின் சபாநாயகர் Park Byeong-seug ஜனவரி 19 ஆம் திகதி இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusoglu இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன அரச சபை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ தற்போது இலங்கைக்கான விஜயத்தை முடித்திருந்தார்.
சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருவதை இந்த விஜயங்கள் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.