300,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிச் சந்தையில் தேவையான அரிசி கிடைப்பதை உறுதி செய்வதற்காக சம்பா அரிசிக்கு மாற்றாக 200,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 100,000 மெற்றிக் தொன் ஜிஆர் 11 குறுகிய தானிய அரிசி வகையை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.