பயங்கரவாத செயலுக்கு மன்னிப்பு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி கூறுகையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், பயங்கரவாதம் இந்தியாவுக்கு மாத்திரமின்றி உலகுக்கே சவாலாக உள்ளது. மனித நேயத்துக்கும், அமைதிக்கும் எதிரியாக உள்ளது.
பயங்கரவாத தடுப்புக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க இந்தியா முயற்சி செய்யும். பயங்கரவாத செயல்களை மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா கடந்த ஆண்டு முதல் இருந்து வருகிறது. இந்த ஆண்டுடன் பதவிக் காலம் நிறைவடையவுள்ளது.
பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்பான பயங்கரவாத தடுப்புக் குழுவின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.