வரும் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
உலகளாவிய பொருளாதர வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முடிவில் உள்நாட்டு உற்பத்தி 8.3 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் வரும், நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி அதன் அண்டை நாடுகளை விடவும் வலுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பிந்தைய இந்திய பொருளாதாரம் கணிக்கப்பட்ட அளவைவிட வளர்ச்சி அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.