வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகொலை செய்யப்பட்ட 8 கைதிகள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு, கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் கடந்த 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, வழக்கின் தீர்ப்பை தயார்ப்படுத்த முடியாத காரணத்தினால் தீர்ப்பு அறிவிப்பை பிற்போடுவதாக மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் கிஹான் குலதுங்க தெரிவித்தார். அதற்கமைய குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில், 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
எனினும் 8 கைதிகளின் படுகொலை தொடர்பிலேயே சட்டமா அதிபருக்கு வழக்கு தொடர போதிய சாட்சிகள் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.