சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் 46ஆவது மாதாந்த சபை அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
அதன் போது சபை உறுப்பினர் சி.கௌசலா , ” சனசமூக நிலையங்கள் மற்றும் கோவில் நிர்வாகங்களில் பெண்களை இணைத்துக்கொள்வதனை கட்டாயமாக்க வேண்டும்” என சபையில் பிரேரணையை முன் வைத்தார்.
அதனை சபை உறுப்பினர்கள் ஆதரித்ததை அடுத்து சபையில் அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.