உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றைக் காரணம் காட்டி தேர்தலை அரசாங்கம் பிற்போடுவதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குற்றம் சாட்டினார்.
கொரோனா தொற்றின் முதல் அலைக்கு மத்தியில் கூட நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றமையை சுட்டிக்காட்டிய அவர் இதனை தெரிவித்தார்.
இருப்பினும் இவ்வாறானதொரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சருக்கு உள்ள உரிமை மற்றும் அதிகாரத்தை பெஃப்ரல் அமைப்பு கேள்விக்குட்படுத்தவில்லை என கூறினார்.
எவ்வாறாயினும், இந்த நடவடிக்கையானது பொதுமக்களின் உரிமையைப் பறிக்கும் செயற்பாடு என ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
எனவே, தாமதத்திற்கு உண்மையான காரணம் நாட்டின் பொருளாதார மற்றும் கொரோனா வைரஸ் நிலைமையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.