இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வரவு செலவு திட்டம் ஊடாக 1000மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக கால்நடை இராஜாங்க அமைச்சர் கெலும் குணவர்த்தன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டம் நேற்று(செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.
கால்நடை வளங்கள்,பண்ணைகள் மேம்பாடு மற்றும் பால்,முட்டைசார்ந்த தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கெலும் குணவர்த்தன தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
வரவு செலவு திட்டம் ஊடக பால் உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக அது சார்ந்த தொழில்துறையினை மேம்படுத்தல்,நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு கிராமிய பொருளாதாரத்தின் பங்களிப்பினைப்பெற்றுக்கொள்ளல் நோக்குடன் இந்த செயற்றிட்டத்தினை ஜனாதிபதி சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் ஊடாக முன்னெடுத்துவருகின்றார்.
இதன்கீழ் முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் குறித்து ஆராயும் வகையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண விவசாய,கால்நடை,மீன்பிடி அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா,மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்,கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி,சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் எம்.பஷீ உட்பட அமைச்சின் செயலாளர்,உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்டாக்காலி பசுக்களை பயன்படுத்தி பால் பெற்றுக்கொள்ளுதல்,பசுக்களுக்கு தேவையானபுல்பாற்றுக்குறைக்குதீர்வினைப்பெற்றுக்கொள்ளுதல்,பால்பண்ணையாளர்களுக்கான கொடுப்பனவு வழங்குதல் மற்றும் வழிகாட்டல்,பாற்பண்ணைகளை அதிகரித்தல்,நல்லிண மாடுகளைப்பெற்றுக்கொடுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.
இலங்கையில் தினமும் 35ஆயிரம் மில்லி லீற்றர் பாலைப்பெற்றுக்கொள்வதற்கான வகையில் அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதன்போது அரசாங்கத்தின் செயற்றிட்டத்தினை ஜனவரி 20ஆம் திகதிஆரம்பிக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.