நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின் தடைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொது உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் பல சிவில் அமைப்புகளுடன் இணைந்து இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளன.
இந்த நிலையில், குறித்த முறைப்பாடு ஜனநாயக சார்பு அரசாங்கத்தின் கீழ் விசாரிக்கப்படும் என இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
திடீரென அறிவிக்கப்படாத மின்வெட்டு மூலம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மின் மாபியா மீது முறைப்பாடு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்வெட்டால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.