பொதுமக்கள் காட்டும் தயக்கத்தை கருத்திற்கொண்டு தடுப்பூசிகளை துரிதப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு MOH பகுதியிலும் மூன்று கூடுதல் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும் என்றும் அதுதவிர, மக்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கு வசதியாக, அனைத்து மருத்துவமனைகளும் தங்கள் தடுப்பூசி மையங்களை இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தடுப்பூசி மையத்தை அடைய முடியாத எவரும், அருகிலுள்ள MOH அலுவலகத்திற்குத் தெரிவிக்கலாம் என்றும் இதனால் தொலைபேசி சேவையை ஏற்பாடு செய்யலாம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.