அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிப்பதன் மூலம் பெறுமதியான நேரத்தை மீதப்படுத்துவதுடன் தேவையற்ற
செலவீனங்களையும் குறைக்க முடியும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்றாட நடவடிக்கைகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்தும் தொடர்பிலும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
உச்சக்கட்ட தொற்றுநோயின் போது பொது முடக்கத்தை விதிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, தொழிலாளர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது பணிகளை செய்து முடித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சில செயற்பாடுகளை வீட்டில் இருந்தபடியே செய்து முடிக்க முடியும் என்பதை அந்தக் காலக்கட்டத்தின் ஊடாக உணர்ந்து கொண்டதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.
எனவே புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திறமையான அரச சேவையை உருவாக்குவது புத்திசாலித்தனமானது என அவர் சுட்டிக்காட்டினார்.