அரச ரகசியங்களை வெளியிடும் சட்டத்தின் கீழ் டென்மார்க்கின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிளாஸ் ஹ்ஜோர்ட் ஃபிரடெரிக்சென், குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
ஆனால், அவர் எந்த விதமான தகவல்களை கசியவிட்டார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் டென்மார்க்கிற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் அவர் ஒருபோதும் செய்ய மாட்டார் என்று வலியுறுத்தினார்.
‘எனது கருத்துச் சுதந்திரத்தின் வரம்புகளை மீறியதற்காக குற்றவியல் சட்டத்தின் பிரிவு 109இன் கீழ் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்’ ஃபிரடெரிக்சன் தனது லிபரல் அல்லது வென்ஸ்ட்ரே கட்சி மூலம் ஒரு அறிக்கையில் கூறினார்.
இதனிடையே அமெரிக்காவுடன் ஒரு உயர்-ரகசிய ஒத்துழைப்பு இருப்பதை உறுதிப்படுத்த முன்னாள் அமைச்சர் தோன்றியதாகக் டேனிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது டேனிஷ் தரவை உளவு பார்க்க அமெரிக்காவுக்கு அனுமதித்தது.
தண்டனைச் சட்டத்தின் கீழ், அரசாங்கம் சம்பந்தப்பட்ட இரகசியப் பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள் அல்லது தீர்மானங்களின் விபரங்களை வெளியிடுவது தேசத்துரோகச் செயலாகும். மேலும் இதற்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
2020ஆம் ஆண்டில், வழங்கிய நேர்காணலில், டேனிஷ் குடிமக்கள்இரகசிய வலையமைப்பு வலையில் சிக்கிக் கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டி பாதுகாப்பு நிபுணர்களை ஃபிரடெரிக்சன் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
2012 முதல் 2014ஆம் ஆண்டு வரை அப்போதைய ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் உட்பட ஐரோப்பிய அரசியல்வாதிகள் பற்றிய உளவுத் தகவல்களை சேகரிக்க அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகத்துக்கு பாதுகாப்பு புலனாய்வு சேவை உதவியதாக டேனிஷ் பொது சேவை ஒளிபரப்பாளர் டி.ஆர். கடந்த ஆண்டு தெரிவித்தது. மெர்க்கலை உளவு பார்க்க அமெரிக்கா உதவியதாக டென்மார்க் குற்றம் சாட்டியுள்ளது.
ஃபிரடெரிக்சன் 2019ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகள் பாதுகாப்பு அமைச்சராகவும், புலனாய்வு சேவைகள் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
இதேபோல, திங்கட்கிழமை, இதே குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் வெளிநாட்டு உளவுத்துறை தலைவர் லார்ஸ் ஃபைன்சென், கைது செய்யப்பட்டுள்ளார்.
லார்ஸ் ஃபைன்சென், ஒரு மாத காலம் சிறையில் இருந்துள்ளார். மேலும் ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறப்படுகிறது. அவர் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார் மற்றும் தான் குற்றமற்றவர் என்று ஒப்புக்கொள்வதாக கூறினார்.