கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதன்படி 37 ஆயிரம் மெட்றிக் டன் எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
8 நாட்களுக்கு போதுமான 10 ஆயிரம் மெட்றிக் டன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எரிபொருளை விடுவிப்பதன் காரணமாக, நாட்டில் மின் தடை ஏற்படாது என்பதோடு மூடப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறக்க வாய்ப்புள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமானது எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை காரணமாக நாட்டில் மின்வெட்டு ஏற்படாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.