கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் 600 இடங்களில் நடைபெறவுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவிக்கையில், வியாழக்கிழமை மட்டுமன்றி சனிக்கிழமை தோறும் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் தகுதியுள்ளவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
ஒமிக்ரோன் தொற்று பரவலைத் தொடர்ந்து தடுப்பூசி பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இதன்படி தமிழகத்தில் வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாக 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.