நாடாளுமன்ற நிதி அலுவல்கள் பற்றிய ஆலோசனைக் குழுவிற்கு சபாநாயகர் தலைமையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற அவைத் தலைவர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் பிரதம கொறடா மற்றும் எதிர்க்கட்சி பிரதம கொறடா உட்பட 21 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவிற்காக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயரை அறிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மேலும் ஒருவர் எதிர்காலத்தில் நியமிக்கப்படுவார் என்றும் கூறினார்.
இதில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, டளஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க மற்றும் அலி சப்ரி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக, ரவூப் ஹக்கீம், அனுர திஸாநாயக்க, டிலான் பெரேரா, ரிஷாட் பதியுதீன், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.