பிரித்தானியாவில் மின்சார கார் பேட்டரிகளை பெருமளவில் தயாரிக்கத் திட்டமிடும் நிறுவனம், நார்தம்பர்லேண்டில் அதன் முன்மொழியப்பட்ட தொழிற்சாலைக்கு அரசாங்க நிதியைப் பெற்றுள்ளது.
பிரிட்டிஷ் வோல்ட், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கம்போயிஸில் உள்ள ஜிகாஃபாக்டரிக்கான திட்டங்களை அறிவித்தது. இது 3,000 வேலைகளை உருவாக்கும் என கூறப்பட்டது.
இந்தநிலையில், அரசாங்கம், தனது வாகன மாற்ற நிதி மூலம் சுமார் 100 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளது.
முதலீட்டாளர்களான ட்ரைடாக்ஸ் மற்றும் அபிர்டனின் ஆதரவையும் அறிவித்தது. இது தனியார் நிதியில் சுமார் 1.7 பில்லியன் பவுண்டுகளை வழங்குகின்றது.
இதுகுறித்து வணிகச் செயலர் குவாசி குவார்டெங் கூறுகையில், ‘இது மறு தொழில்மயமாக்கல். நாங்கள் தொழில்துறையை கொண்டு வருகிறோம். வெளிப்படையாக முதலீடு செய்யப்படாத பகுதிக்கு உற்பத்தியை கொண்டு வருகிறோம். ஆயிரக்கணக்கான வேலைகளை நாங்கள் கொண்டு வருகிறோம்’ என கூறினார்.