வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்.வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ்.இந்திய உதவித்துணைத்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான 12 வது சர்வதேச வர்த்தகச்சந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் யாழ் மாநகர திறந்தவெளி மைதானத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக 47 விற்பனைக்காட்சிக்கான நுகர்வோர் பொருட்களும், இதர உள்ளிட்ட பொருட்களும் உழவு இயந்திர வாகனம், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பாகங்களின் வாகனங்களும் தொழில் முயற்சியினை தேடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கூடாரங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டு உத்தியபூர்வமாக சர்வதேச வர்த்தகச் சந்தையினை அங்குராப்பண நாடாவினை வெட்டி ஆரம்பித்துவைத்தார்.
இதில் வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு,யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் யாழ்.இந்திய உதவித்துணைத்தூதரகம் ஆகியவற்றின் துறைசார்ந்த அதிகாரிகள்,ஒருங்கிணைப்பு குழுவினர்கள்,வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். இவ் காட்சி நாளையுடன் நிறைவடையவுள்ளது.