உக்ரைன் அரசாங்கத்தை வழிநடத்துவதற்கு மொஸ்கோ அரசாங்கத்தின் சார்பான நபரை நியமிக்க அதிபர் விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ளது.
முன்னாள் உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் யெவன் முராயேவை கிரெம்ளின் வேட்பாளராக நியமிக்கும் நடவடிக்கையை வெளிவிவகார அலுவலகம் எடுத்துள்ளது.
ரஷ்யா ஒரு இலட்சம் துருப்புக்களை உக்ரைனுடனான தனது எல்லைக்கு அருகில் நகர்த்தியுள்ள போதும் அந்நாடு மீதான படையெடுப்பை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
இந்நிலையில் ரஷ்ய அரசாங்கம் ஊடுருவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரித்தானிய அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.
இன்று வெளியிடப்பட்ட தகவல்கள் உக்ரைனைத் தகர்க்க ரஷ்ய எடுத்துள்ள நடவடிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறினார்.
ரஷ்யா தீவிரத்தை குறைக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பு மற்றும் தவறான தகவல் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.