உக்ரைன் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட ஜேர்மன் கடற்படைத் தலைவர் அப்பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க விரும்புகிறது என்ற கருத்து முட்டாள்தனமானது என ஜேர்மன் கடற்படைத் தலைவர் கே-அச்சிம் ஷான்பாக் கூறினார்.
ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரும்புவது மரியாதை மட்டுமே என்றும் அவர் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மேலும் சேதத்தைத் தவிர்க்கும் பொருட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ததாக ஷான்பாக் நேற்று சனிக்கிழமை கூறினார்.
தட்டோடு மேற்குலக நாடுகள் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சமமாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ள போதும் ஜேர்மனி அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுக்க இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்துள்ள நிலையில் மேற்குலக நாடுகளுக்கு விளாடிமிர் புடின் சில கோரிக்கைகளை விடுத்துள்ளார்.
உக்ரைன் இராணுவ பாதுகாப்பு கூட்டணியான நேட்டோவில் இணைவதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகக் கருதப்படும் உக்ரைனுக்கான இராணுவப் பயிற்சிகளைக் கைவிடவும், ஆயுதங்கள் அனுப்புவதை நிறுத்தவும் அவர் அழைப்பை விடுத்தார்.