சிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிறையை உடைத்து கைதிகளை வெளியேற்ற ஐ.எஸ். போராளிகள் முயற்சித்ததை அடுத்து அங்கு கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த மோதலில் குறைந்தது 28 குர்திஷ் பாதுகாப்புப் படையினரும், ஐந்து பொதுமக்களும் 58 ஐ.எஸ். போராளிகளும் கொல்லப்பட்டதாக சிரியாவின் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களின் ஆதரவுடன் குர்திஷ் தலைமையிலான படைகள் வியாழக்கிழமை முதல் ஹசாகா நகரில் ஐ.எஸ். போராளிகளுடன் மோதிவருகின்றன.
கிட்டத்தட்ட 03 ஆண்டுகளுக்கு முன்பு சிரியாவில் குவேரான் சிறைச்சாலை மீதான தாக்குதல் தோற்கடிக்கப்பட்ட நிலையில் ஐ.எஸ். போராளிகளின் இலட்சியமாக இது கருதப்படுகின்றது.
குறித்த தளத்தில் ஐ.எஸ் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 3,500 பேர் தங்கியுள்ளனர் என்றும் இதில் சில தலைவர்கள் உள்ளனர் என்றும் ஒரு கண்காணிப்பு குழு கூறுகிறது.
சிறைச்சாலை உடைப்பை அடுத்து அங்கிருந்து தப்பி ஓடியவர்களில் நூற்றுக்கணக்கான ஜிஹாதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர் என்றும் சிலரை பிடிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையைச் சுற்றி வளைத்து, அருகிலுள்ள சுற்றுப்புறங்களைக் கட்டுப்படுத்த குர்திஷ் பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்ற நிலையில் அப்பகுதியில் இருந்த குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.