70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட யேமன் தடுப்பு முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் வெளியிட்டுள்ளது.
வடமேற்கு யேமனில் உள்ள கிளர்ச்சியாளர் ஹூதி இயக்கத்தின் கோட்டையான சாடாவில் கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடும் சவுதி தலைமையிலான கூட்டணி வான்வழித் தாக்குதலை நடத்தவில்லை என மறுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கண்டனம் வெளியிட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் 2015 முதல் ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த மோதல் காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்துள்ளனர்.