சிறிய சத்திரசிகிச்சை ஒன்றுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை நவலோகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அவர் குணமடைந்து வருவதாக சுகாதார வட்டாரங்களை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த லமினெக்டோமி எனப்படும் முள்ளந்தண்டு அறுவை சிகிச்சையானது பிரித்தானியாவில் பயிற்சி பெற்ற முன்னணி எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்பட்டது.
பிரதமர் குணமடைந்து வருவதாகவும், விரைவில் மீண்டும் தனது உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை பிரதமரின் வாயில் சிறிய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீண்ட காலமாக பிரதமரின் பிரத்தியேக மருத்துவராக செயற்பட்டுவரும் வைத்தியர் நரேந்திர பிந்துவே இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார் என கூறப்படுகின்றது.