சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஜனவரி 30 ஆம் திகதிக்கு முன்னர் இப்பணிகளைத் தொடங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். வொல்கா தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் கொள்வனவுக்கான அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக, ஜனவரி 03ஆம் திகதி முதல் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
இது, நாளை முதல் மீண்டும் இயங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு வரும் கச்சா எண்ணெயில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீளத் தொடங்க முடியவில்லை என்று தகவலறிந்த வடடாரங்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட எரிசக்தி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட கச்சா எண்ணெய் ஜனவரி 24 ஆம் திகதி நாட்டுக்கு வரவிருந்தது.
ஆனால், இந்தக் கப்பல், புதன் கிழமையே கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.