பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் இருந்து பல மில்லியன் ரூபாய்களை மோசடி செய்த பிரதமரின் செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்ட குறித்த நபரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலப்பகுதியிலேயே அவரின் செயலாளராக செயற்பட்டார் என்றும் அதன்போது, அரச வங்கியில் உள்ள பிரதமரின் வங்கிக்கணக்கிற்கான ஏடிஎம் கார்ட் அவரிடம் வழங்கப்பட்டிருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் குறித்த ஏடிஎம் கார்ட்டினை பயன்படுத்தியே பிரதமரின் வங்கிக்கணக்கில் அவர் மோசடி செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி