கொரோனா தொற்றுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த கொள்கை முடிவை வகுக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இணை நோய் உடையவர்களுக்கும், சுகாதாரத்துறையினருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என நிபுணர்கள் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகளில் ஒமிக்ரோன் பரவலுக்கு எதிராக எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை எனவும் குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.