இந்தியா – மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) காணொலி காட்சி மூலம் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்கெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது இந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கவும், கல்வி, கலாச்சாரம், மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கொரோனா பரவல், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.