கடந்த அரசாங்கம் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்குகூட நடவடிக்கை எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள மின் நெருக்கடி தொடர்பாக கடந்த அரசாங்கம் குற்றஞ்சாட்டி வருகின்ற போதிலும், ஒரு மின் உற்பத்தி நிலையத்தைகூட நிர்மாணிப்பதற்கு அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுமார் 7 வருடங்களாக மின் உற்பத்தி நிலையம் இல்லை என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், 2030ஆம் ஆண்டளவில் 70% புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் சாத்தியமில்லாத வேலைத்திட்டம் அல்ல எனவும் அதுவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வேலைத்திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், அந்த திட்டம் நமது நாட்டின் அந்நிய செலாவணியை சேமிக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபைக்குள் உள்ள சில குழுக்கள் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் ஹேரத் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.