போராட்டங்களை நடத்துவதற்கு பதிலாக அரசாங்கத்துடன் பேச்சுவரத்தையை நடத்த வருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) நீதி அமைச்சின் நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரால், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் பேசிய அமைச்சர், கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு என்ன கிடைத்தது என கேள்வியெழுப்பினார்.
மேலும் போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் எதையும் அவர்கள் பெற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
போராட்டங்களை மேற்கொள்வது அவர்களுடைய ஜனநாயக உரிமை என்றாலும் அதனால் எதனையும் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என அமைச்சர் கூறினார்.
ஆகவே பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.