74ஆவது சுதந்திர தின விழா அணிவகுப்பில் 6 ஆயிரத்து 500 படை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இவர்கள் முப்படை, பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, இலங்கை சிவில் பாதுகாப்பு படை மற்றும் தேசிய கெடட் படையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 3 ஆயிரத்து 463 இராணுவ வீரர்கள், 919 கடற்படை வீரர்கள், 804 விமானப்படை வீரர்கள், 336 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 282 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அணிவகுப்பில் இணையவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 437 பேரும் தேசிய கெடட் படையைச் சேர்ந்த 259 பேரும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வினை சுதந்திர சதுக்க வளாகத்தில் மேற்கொள்வதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.