தேசிய மக்கள் சக்தியின் கூட்டம் மீது மேற்கொள்ளப்பட்ட முட்டைத் தாக்குதலை அரசியல் தலையீடுகளினால் மறைக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்தார்.
மேலும் பிரசன்ன ரணதுங்க பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதன் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தெளிவாகின்றது என கூறினார்.
இச்சம்பவத்தின் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதை மறைக்க முடியாது என்றும் இவற்றை மறைக்க முற்பட்டாலும் மக்கள் உண்மையை அறிந்துள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டார்.
சட்டவிரோத நடவடிக்கை மூலம் தேசிய மக்கள் சக்தியின் பயணத்தை தடுக்க முடியாது என்றும் இவ்வாறான முயற்சிகள் பொதுமக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.