திவிநெகும, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான மற்றுமொரு வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,292 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தி நாட்காட்டி அச்சிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணை இடம்பெற்ற நிலையில் சாட்சிகளை அழைக்காமல் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட 50 இலட்சம் நாட்காட்டியை அச்சடித்து விநியோகித்தமை தொடர்பாக சட்டமா அதிபர் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.