இலங்கையை வளமான நாடாக மாற்றவும் அனைத்து பிரஜைகளின் வருமானத்தை வலுப்படுத்தவும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தித் திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
“ஒரு இலட்சம் வேலைத்திட்டம்“ என அழைக்கப்படும் இந்த அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய வகையில் இன்று காலை 8.52 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இலங்கையை வளமான நாடாக மாற்றும் இலக்கை நோக்கி “கிராமத்துடனான உரையாடல் – வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் வேலைகள்” திட்டம் செயற்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் உள்ள 336 பிரதேச செயலாளர் பிரிவுகள் உட்பட 14 ஆயிரத்து 21 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன்படி, ஒரு கிராம சேவையாளர் பிரிவில் 5 அல்லது 6 திட்டங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.