மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமரத்தன் முருகன் ஆலய புனராவர்தரத அஷ்டபந்தன நூதன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக மகா யாக பெரும் சாந்தி பெருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலய விஷேட மகாயாக கிரியைகள் நேற்று(புதன்கிழமை) காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா சுகாதார நடைமுறைகளை கவனத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் பங்குபற்றுதலுடன் இந்த விழா இடம்பெற்று வருகின்றது.
கர்மாரம்பம் பிரதிஷ்டா சங்கல்பம், வினாயகர் வழிபாடு, கணபதி கோமம் போன்ற வழிபாட்டுக் கிரியைகளுடன் நேற்றைய முதலாம் நாள் ஆரம்பமானது.
ஆலயத்தின் கும்பாபிஷேகம் மற்றும் விஷேட யாக பூசைகள் யாவும் பிரதிஷ்டா பூசனம் நயினை சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள், இனுவில் தர்மசாத்த குருகுல அதிபர் வேதாகம ஞான பாஸ்கரன் சிவஸ்ரீ தானுமஹா வேதக் குருக்கள் ஆகியோரின் ஆசியுடன் கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
கும்பாபிஷேக பிரதம குருவான வேதாகம சக்கரவர்த்தி, சிவாகம கலாநிதி சிவஸ்ரீ ஆதி.செளந்தராஜக் குருக்கள் தலைமையிலான குருமார்களால் நிகழ்த்தப்படவுள்ளது.
கும்பாபிஷேக கிரியைகள் ஒருங்கிணைப்பு கிரியா ஜோதி கனகபூஜா துறந்தனர் சிவஸ்ரீ ச.சபாரெத்தினம் குருக்களினால் இடம்பெறவுள்ளது.
முருகப் பெருமானின் எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிகளில் இடம்பெற்றவுள்ளது என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.