ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா என இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், குடியரசு தலைவரின் உரையில் தேசம் சந்திக்கும் பிரதான சவால்கள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
அதிகாரத்தின் பார்வையில் அந்தப் பட்டியல் இருந்ததே தவிர உத்தியை மையமாக வைத்து அல்ல. வேலையின்மை குறித்தும் குடியரசு தலைவர் உரையில் எந்தவோர் அம்சமும் இடம்பெறவில்லை.
தற்போது இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று ஏழைகளுக்கானது. மற்றொன்று செல்வந்தர்களுக்கானது. இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.