இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறும், தமது வாழ்வாதாரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மீனவர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே, இன்று நண்பகல் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுடன் கலைந்துரையாடினார்.
இதன்போது, தமக்கு ஆக்கப்பூர்வமான எழுத்து மூல தீர்வு வேண்டும் என மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
எழுத்து மூல ஆவணம் வழங்க முடியாது, எனினும் வாய்மூலம் வாக்குறுதி வழங்குவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.
இதனால் மீனவர்களுக்கும் அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு, அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.