மொராக்கோவில் 04 நாட்களாக கிணற்றில் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் இறந்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்கத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.
ரேயன் என்ற சிறுவனை மீட்பதற்கான முயற்சி, இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பலர் மக்கள் நேரிலும் ஆயிரக்கணக்கானோர் இணையம் வழியாக பிராத்தனை மேற்கொண்டனர்.
சிறுவன் கிணற்றின்ல் 104 அடி ஆழத்தில் வீழ்ந்த நிலையில் நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சத்தால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இருப்பினும் இறுதியாக சனிக்கிழமை மாலை சிறுவனை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்த மீட்புப்பணியாளர்கள் சிறுவனின் நிலை குறித்து அறிவிக்கவில்லை.
சமூக வலைதளங்களில், உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்த #SaveRayan என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி மக்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
ஆனால் சில நிமிடங்களில் ரேயான் இறந்துவிட்டதாக அறிக்கை வந்தபோது இது மனவேதனையாக மாறியது.
இதன் பின்னர் டுவிட்டர் பயனர்கள் அஞ்சலி செலுத்தவும் சோகத்தை வெளிப்படுத்தவும் அதே ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த தொடங்கினர்.